TNPSC : இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வு முடிவுகள் வெளியீடு..! கட்ஆஃப் என்ன?



தமிழ்நாடு பொதுப் பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பணிக்கு மொத்தமாக 50 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 07.05.2022 மற்றும் 08.05.2022 ஆம் தேதிகளில் நடைபெற்றது.


மேலும் தேர்வில் தகுதியானவர்களுக்கு வாய்வழி தேர்வு 01.12.2022 மற்றும் 02.12.2022 ஆம் தேதிகளில் நடைபெற்றது. தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.


தமிழ்நாடு பொதுப் பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பணிக்கு 50 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 25.08.2021 ஆம் தேதியில் வெளியானது. இப்பணிக்கு ஆனலைனில் விண்ணப்பிக்க 24.09.2021 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.


இந்த பணிகளுக்கு முதல் நிலை, முதன்மை மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில் 06.11.2021 ஆம் தேதியில் முதல் நிலை தேர்வு நடைபெற்றது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் முதன்மை தேர்வுக்குச் சென்றனர்.


அதனைத் தொடர்ந்து முதன்மை தேர்வு 07.05.2022 மற்றும் 08.05.2022 ஆம் தேதிகளில் நடைபெற்றது. மொத்தம் 467 பேர் முதன்மை தேர்வை எழுதினர். அதிலிருந்து வாய்வழி தேர்வுக்கு 103 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


அவர்களுக்கான வாய்வழி தேர்வு 01.12.2022 மற்றும் 02.12.2022 ஆம் தேதிகளில் நடைபெற்றது. தற்போது அதற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளது.


தேர்வர்களின் பதிவு எண் மற்றும் முதன்மை தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் வாய்வழி தேர்வு மதிப்பெண்கள் இணைத்து மொத்த மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


முதன்மை தேர்வு 400 மதிப்பெண்களுக்கும் வாய்வழி தேர்வு 60 மதிப்பெண்களுக்கும் நடைபெற்றது. மொத்தம் 460 மதிப்பெண்களுக்கு SCs,SC(A)s and STs பிரிவினர் 140 மதிப்பெண்கள்,MBC(V)s,MBCs and DNCs, MBCs, BC(OBCM)s and BCMs பிரிவினர் 160 மதிப்பெண்கள் மற்றும் இதர பிரிவினர் 180 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் இப்பணிக்குத் தகுதியானவர்கள்.


இட ஒதுக்கீடு முறைப்படி அவர்கள் காலிப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர். வெளியான தேர்வு முடிவுகளைத் தமிழ்நாடு தேர்வு ஆணையத்தில் இணையத்தளத்தில் காணலாம்.


Comments

Popular posts from this blog