தமிழ்நாட்டில் 4 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்



நான்கு லட்சம் காலி பணியிடங்கள் இன்னும் தமிழகத்தில் நிரப்பப்படாமல் உள்ளதாக ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று சொல்லிவிட்டு கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றக்கூடிய முயற்சிகளை தமிழக அரசு செயல்படுத்தி கொண்டு இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தமிழக அரசு எள்ளளவும் முன் வரவில்லை என்பதை ஜாக்டோ ஜியோ வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறது. மேலும் தமிழக அரசு ஓய்வூதியம் என்ற வார்த்தை பேசுவதே தவிர்த்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.


 


அதிமுக ஆட்சியையும் திமுக ஆட்சியும் எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு


முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகையாவது (DA) அதிமுக ஆட்சியில் கிடைத்தது தற்போது அது கூட திமுக ஆட்சியில் கிடைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம் இந்த என்றார்.


தமிழக அரசின் பாதுகாவலனாக இருக்கும் அரசு ஊழியர்கள் தற்போது இருக்கக்கூடிய திமுக ஆட்சி காலத்தில் பாதுகாவலனாக இல்லை எனவும் தெரிவித்தார்.


Comments

Popular posts from this blog