தமிழக அரசு பள்ளிகளில் 450- க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள்.. உடனடி நியமனத்திற்கு அரசு உத்தரவு..!!!!



தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு காரணமாக பணி மாறுதல் பெற்றுச் சென்றுள்ளதால் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் அரசு காலி பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை சேகரித்துள்ளது.



இந்த காலி பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரிய மூலமாக நிரந்தர பணியாளர்கள் நிரப்புவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருதி முதுகலை பட்டதாரி,பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


மொத்தம் 450-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் மற்றும் டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் நேரடியாக இந்த பணிக்கு விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog