தட்டச்சு தேர்வு முடிவு வெளியீடு



தட்டச்சு தேர்வு, நவம்பரில் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகளை, தொழில்நுட்ப கல்வித் துறை நேற்று அறிவித்தது.


இத்தேர்வுக்கு, 1.91 லட்சம் பேர் பதிவு செய்தனர். அவர்களில், 1.82 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றதில், 78.74 சதவீதமான, 1.44 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


ஆங்கில மொழி இளநிலை தட்டச்சில், 68 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். 


தேர்ச்சி சதவீதத்தை பொறுத்தவரை, ஆங்கில தட்டச்சு உயர்வேகப் பிரிவில், 25.41 சதவீதம் பேர் என தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. அதிகபட்சமாக, தமிழ் இளநிலை தட்டச்சில், 87.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தேர்வு முடிவுகளை, https://dte.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog