சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 13,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஒன்றிய மனிதவளத்துறை உத்தரவு



நாடு முழுவதும் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில், காலியாக உள்ள 13 ஆயிரத்து 20 பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்று ஒன்றிய மனித வள மேம்பாடு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அதன்படி தமிழ்நாட்டில் 4,188 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒன்றிய மனித வள மேம்பாடு மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தக்னிகி சிக்‌ஷா விதான் கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகள் என இரண்டு பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்படும். 


இதில், தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 35 ஆயிரம் வரை வழங்கப்படும். பணியிடங்களை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் 4,188 பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் யோகா 349, கலை 349, இசை 349, இந்தி 349, தெலுங்கு 349, ஆங்கிலம் 349, கணக்கு 349, பொது அறிவியல் 349, சமூக அறிவியல் 349, நூலகர் 349, தொழில் நுட்ப உதவியாளர் 349, அலுவலக உதவியாளர் 349, என மொத்த பணியிடங்கள் 4188 நிரப்பப்படும். 


இவற்றில் யோகா, கலை, இந்தி, நூலகர், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல், தெலுங்கு, ஆங்கிலம் இசை உள்ளிட்ட துறைகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப் பட்ட துறைகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழிப்பாடத்துக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மொழி பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கம்ப்யூட்டர் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க பிஎட் அல்லது இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். http://www.tsvc.in /application.php என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500, ஆன்லைனில் செலுத்த வேண்டும். 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog