ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2.. தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் வெளியீடு.!



தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியருக்கான தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது.


கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.


அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கான முதல் தாள் கடந்த அக்டோபர் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்றது. முதல் தாள் தேர்வின் முடிவுகள் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது.


 


அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாளுக்கான கணினி வழித்தேர்வு பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை காலை/ மாலை என இரு வேளைகளில் நடத்தப்பட்டது.


இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது!

Comments

Popular posts from this blog