நூலகர் வேலைவாய்ப்பு - அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி




ஒருங்கிணைந்த நூலகர் பணிகள், சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான 35 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான கணினிவழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது . இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு மார்ச் 1- ம் தேதி கடைசி நாளாகும் .


டிஎன்பிஎஸ்சி அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரியில் நூலகர் 8 இடங்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலகர் மற்றும் தகவல் அலுவலர் 1 இடம், மாவட்ட நூலக அலுவலர் 3 இடங்கள் என 12 இடங்கள். இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.


மேற்கண்ட பதவிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ.57,700 - 2,11,500, ரூ.56,100 - 2,08,700, ரூ.56,100 - 2,05,700 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதே போன்று பொதுத்துறையின்கீழ் தலைமைச் செயலக நூலகத்தில் உதவியாளர் 2 இடங்கள், பொது நூலக துறையில் கலைஞர் நினைவு நூலகம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் 21 இடங்கள் என 23 இடங்கள். இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.


மேற்கண்ட பதவிகளுக்கு மாதம் ரூ.35,400 - 1,30,400, ரூ.19,500 - 71,900 சம்பளமாக வழங்கப்படும்


நூலகத் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டம், முதுகலை டிப்ளமோ முடித்திருப்பவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


மேற்கண்ட பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மார்ச் 1-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.inஅல்லது www.tnpscexams.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மார்ச் 6-ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மார்ச் 8 -ம் தேதி இரவு 11.59 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்யலாம்.


 


மேற்கண்ட பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மே 13-ம் தேதி காலை முதல் தாள் தேர்வும், பிற்பகல் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும்.


எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog