தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு தேதிகள் அறிவிப்பு



தமிழகத்தில் நடப்பு மாதத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை அங்கீகாரத்துடன் செயல்படும் வணிகவியல் தொழிற்கல்வி மையங்கள் மூலம் மாணவர்களுக்கு தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 


இதன்படி வருகிற 11 மற்றும் 12ம் தேதி சுருக்கெழுத்து உயர்வேக பிரிவுக்கு தேர்வு நடைபெற உள்ளது. சுருக்கெழுத்து மற்ற பிரிவுக்கு வருகிற 18, 19ம் தேதிகளில் தேர்வு நடைபெறும். இதுபோல் தட்டச்சு தேர்வுகள் வருகிற 25, 26ம் தேதிகளில் நடைபெற உள்ளன. தேர்வு அட்டவணை விபரம் http://dte.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog