இளநிலை கியூட் தேர்விற்கான விண்ணப்ப பதிவு துவக்கம்!



ஆண்டுதோறும் முன்னணி மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வாக யுஜிசி சார்பில் தேசிய தேர்வு முகமையால் CUET-UG (common university entrance test) என்ற நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 



தற்போது 2023ஆம் ஆண்டுக்கான கியூட் இளங்கலை தேர்வுக்கான விண்ணப்ப தேதி மற்றும் தேர்வு விவரங்களை NTA வெளியிட்டுள்ளது.


இந்த தேர்வு திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலகழகத்தில் (CUTN) வழங்கப்படும் இளநிலை மற்றும் ஒருங்கினைந்த படிப்புகளுக்கும் பொருந்தும். 


CUET-UG விண்ணப்ப தேதிகள் 


தேர்வுக்கான விண்ணப்ப பதிவு 09.02.2023 அன்று துவங்கி மார்ச் 12, 2023 இரவு 9 மணி வரை நடைப்பெறும். கடைசி நாளன்றோ அல்லது அதற்கு முன்போ, விண்ணப்பக்கட்டணத்தை முழுவதுமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பத்தில் உள்ள தவறுகளை சரி செய்ய வரும் 15.03.2023 முதல் 18.03.2023 வரை கால அவகாசம் வழங்கப்படும்.


CUET-UG தேர்வு தேதிகள்


CUET-UG தேர்வு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைப்பெறும். எனவே இதற்கான தேர்வு மைய அறிவிப்புகள் வரும் ஏப்ரல் 30 அன்று வெளியாகும். 


அதற்கு பிறகு மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஹால் டிக்கெட்டுகளை NTA இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். 


இதனை தொடர்ந்து CUET-UG 2023 தேர்வுகள் மே மாதம் 21ம் தேதியிலிருந்து துவங்க உள்ளது.


CUET-UG 2023 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


STEP 1 : CUET-UG அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் செல்ல https://cuet.samarth.ac.in இங்கே கிளிக் செய்யவும்.


STEP 2 : முகப்பு பக்கத்தில் வலது மேல்புறத்தில் Register என்ற இடத்தில் கிளிக் செய்யவும்.


STEP 3 : புதிதாக திறக்கும் டேபில் உங்களுக்கான அறிவுரைகள் இருக்கும். அவற்றை முழுமையாக படித்து விட்டு கீழே Proceed என்ற இடத்தை கிளிக் செய்யவும்.


STEP 4 : உள்ளே நுழைந்தவுடன் முதலில் Online Registration Form - ஐ சரியாக பூர்த்தி செய்யவும்.


STEP 5 : அதற்கு பிறகு உங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உங்களுக்கு புதிய லாகின் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் உருவாகி விடும்.


STEP 6 : அதன் பின் லாகின் செய்து CUET-UG 2023 ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.


STEP 7 : விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து முடித்தவுடன் விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்தி சப்மிட் கொடுக்கவும்.


STEP 8 : பின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் இறுதி வடிவத்தை டவுன்லோட் செய்து வைத்து கொள்ளவும்.


CUET-UG 2023 விண்ணப்ப கட்டணம்:


1. மூன்று பாடங்கள் வரை: 


பொதுபிரிவிற்கு(UR)  ₹ 750 

OBC(NCL)/ EWS  ₹ 700 

SC/ST/PwBD/மூன்றாம் பாலினம் ₹650


2. ஏழு பாடங்கள் வரை:


பொதுபிரிவிற்கு(UR)  ₹ 1500 

OBC(NCL)/ EWS  ₹ 1400 

SC/ST/PwBD/மூன்றாம் பாலினம் ₹1300 


3. பத்து பாடங்கள் வரை 


பொதுபிரிவிற்கு(UR)  ₹ 1750 

OBC(NCL)/ EWS  ₹ 1650 

SC/ST/PwBD/மூன்றாம் பாலினம் ₹1550 


மேலும் தகவல்களுக்கு CUET-UG இணையதளத்தை https://cuet.samarth.ac.in பார்க்கவும்.

Comments

Popular posts from this blog