TNPSC Group 4 Results: குரூப் 4 தேர்வு ரிசல்ட் எப்போது? 



2023 பிப்ரவரி மாதத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வாணையம் தெரிவித்திருந்த நிலையில், தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2 ஆவது வாரத்தில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.


தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


ஆனால், பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் தீர்ப்புக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு குரூப் 2 ரிசல்ட் வெளியிடப்பட்டது. அப்போது டிசம்பர் மாதத்தில் குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரிசல்ட் வெளியிடப்படவில்லை.


இதனிடையே டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடுவது தொடர்பான முடிவை ஜனவரி 2023ல் தான் தேர்வாணையம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. எனவே ஜனவரி இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.


ஆனால், சில நாட்களில் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023ல் தான் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 7301 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் பிப்ரவரி 2023ல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பிப்ரவரி தொடங்கி முதல் வாரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் தேர்வர்கள் ரிசல்ட் எப்போது வரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.


இந்தநிலையில், தேர்வு முடிவுகள் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படலாம். அதாவது 15 ஆம் தேதிக்குள் வெளியாகலாம் என்ற இதுதொடர்பாக தகவல் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர். தேர்வாணையம் தேர்வு முடிவு குறித்த கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில் எந்த மாற்றமும் இதுவரை செய்யவில்லை என்பதால், நிச்சயமாக பிப்ரவரி இறுதிக்குள் ரிசல்ட் வெளியிடப்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி 14 லட்சம் தேர்வர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில், 2023க்கான ஆண்டு திட்டத்தில் குரூப் 4 தேர்வு அறிவிப்பு ஆண்டின் இறுதியில் நடைபெறும் என்றும், தேர்வு 2024ல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் குரூப் 2 தேர்வும் இல்லை என்று இருந்தது. இதனால் தேர்வர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள் குரூப் 4 தேர்வை 2023க்குள்ளாகவே நடத்தி முடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


இந்தநிலையில், குருப் 4 தேர்வுக்கான காலியிடங்களில் 2500 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தேர்வாணையம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. 


அதேநேரம் காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், காலியிடங்களின் அதிகரிப்பு காரணமாக கட் ஆஃப் மதிப்பெண்கள் சற்றுக் குறையலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தேர்வு முடிவுகளை நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.

Comments

Popular posts from this blog