ஆங்கிலம் தேர்வு பரவாயில்ல பிளஸ் 1 மாணவர்கள் நிம்மதி இது, மாணவர்களின் நிலை



திருப்பூர்;பிளஸ் 1 ஆங்கில தேர்வு எளிதாக இருந்தது; அனைத்து பகுதியிலும் எதிர்பார்த்த கேள்விகள் வந்திருந்ததால், தேர்வெழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 1 ஆங்கில தேர்வெழுத, 25 ஆயிரத்து, 702 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்


இவர்களில், 24 ஆயிரத்து, 716 பேர் தேர்வெழுதினர். 986 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.திருப்பூர், காங்கயம் ரோடு, செயின்ட் ஜோசப் பள்ளியில் தேர்வெழுதிய மாணவர்கள் கூறுகையில், 'ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று யோசித்து விடையளிக்கும் வகையில் இருந்தது. இரண்டு, ஐந்து மதிப்பெண் வினாக்களில், எதிர்பார்த்த 'பேரகிராப்' கேள்விகள் இடம் பெற்றன.முந்தைய, திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளே, பொதுத்தேர்விலும் கேட்கப்பட்டிருந்தது. பாடப்புத்தகத்துக்கு பின் இருந்த கேள்விகள் வந்திருந்ததால், முழு மதிப்பெண் பெற முடியும்,' என்றனர்.கே.எஸ்.சி., அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர் ஐயப்பன் கூறுகையில், ''வினாத்தாள் எளிமையாக இருந்தது.


குறைந்த அளவு படிக்கும் மாணவர் கூட இவ்வினாத்தாளால் தேர்ச்சி பெற்று விட முடியும். பாடங்களுக்கு பின் உள்ள கேள்விகள் அப்படியே வந்திருந்தது. 'பேரகிராப்' 'போயம்' பகுதியில், முதல் மூன்று யூனிட்டுகளில் இருந்து கேள்விகள் இடம் பெற்றது. வினாத்தாள் எளிமையாக இருந்ததால், ஆங்கிலத்தில் நிச்சயம் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்,'' என்றார்.

Comments

Popular posts from this blog