டெட்' தேர்வு 'ரிசல்ட்': 2 சதவீத பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை



ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட் தேர்வு) 2ம் தாளுக்கான முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. இதில் 2 சதவீத பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 'டெட்' தகுதி தேர்வின் 2ம் தாள் தேர்வு, பிப்.,யில் நடத்தப்பட்டது.


2.54 லட்சம் பேர் பங்கேற்றனர். முடிவுகள் நேற்று (மார்ச் 28) இரவு அறிவிக்கப்பட்டன. www.trb.nic.in என்ற இணையதளத்தில் மதிப்பெண்கள் மற்றும் விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன. 


இதில் தேர்ச்சி பெறும் பட்டதாரிகள், அரசு நடத்த உள்ள ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றால், தரவரிசைப்படி, பணி நியமனம் பெற முடியும்.இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4,01,986 பேர் இந்த தேர்வை எழுத பதிவு செய்த நிலையில் 2.54 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். 


மீதமுள்ள 1.5 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வில் பங்கேற்ற 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 98 சதவீதம் பட்டதாரி ஆசிரியர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog