+2 தமிழ் வினாத்தாள் ரொம்ப ஈஸி..ஆனா 1 மார்க் கஷ்டம்..செண்டம் வருமா?..தேர்வை மிஸ் செய்த 50000 பேர்



தமிழகம், புதுச்சேரியில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழித்தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.


8 லட்சத்து 51 ஆயிரம் பேரில் முதல் நாளில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என தெரியவந்துள்ளது.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மொழித்தாள் தேர்வு மிக எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர்.


இன்று தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுவதால் 3225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று மொழி பாடங்களுக்கான தேர்வு நடந்தது.


திருச்சியில் தான் படித்த பள்ளிக்கு சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். தான் பயின்ற இ.ஆர்.பள்ளியில் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து சென்று ஆய்வு செய்தார். நன்றாக தேர்வு எழுதுமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உற்சாகப்படுத்தினார்.


பிற்பகலில் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர் ஒருவரை நிறுத்தி வினாத்தாளை வாங்கி படித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தேர்வு எப்படி இருந்தது என மாணவர்களிடம் கேட்டார். அவர்கள் எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர். இதேபோல் பிற அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும், மொழி தேர்வு மிக எளிமையாக இருந்ததாக தெரிவித்தனர். ஒரு மார்க் கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறினர்.


இலக்கணம், துணைப்பாடம், மனப்பாடப் பாடல்கள் எளிதாக எதிர்பார்த்ததுபோல் இருந்தது. 6 மதிப்பெண் வினாக்களில் பிளஸ் 2விலுள்ள திருக்குறள் பகுதியிலிருந்து அறிவுடைமை, செய்நன்றி அறிதல் பகுதியிலிருந்து கேள்வி கேட்காமல் பிளஸ் 1ல் படித்த 'திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் - நிறுவுக' என்ற கேள்வியை கேட்டதால் சிரமமாக இருந்தது என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.


பெரும்பாலான மாணவர்கள் புத்தகத்திலுள்ள புறநிலை வினாக்களைப் படித்து தயாராகினர். இதில் புத்தகத்திற்கு உள்ளிருந்து கேட்டதால் மாணவர்கள் சிரமப்பட்டனர். மேலும், 2 மதிப்பெண், 4 மதிப்பெண், 6 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. துணைப்பாடம், மனப்பாடப் பாடல்கள் எதிர்பார்த்ததுபோல் இருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததால் மாணவர்கள் 100 சதவிகித மதிப்பெண் எடுக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர்.


இதனிடையே இன்று நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழித்தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 8 லட்சத்து 51 ஆயிரம் பேரில் முதல் நாளில் 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வு செவ்வாய்கிழமை தொடங்கி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் தமிழகம், புதுச்சேரியில் 3,224 மையங்களில் 7.93 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர்.


நாடு முழுவதும் எச்3என்2 வைரஸ், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் மாணவர்கள் எளிதில் சோர்வடையக்கூடும். எனவே, காலை உணவை தவிர்க்காமல், எளிய வகை உணவை சாப்பிட்டு தேர்வுக்கு செல்வதை பெற்றோர் உறுதிசெய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Comments

Popular posts from this blog