வேகமா பரவுது வைரஸ் காய்ச்சல்... நாளை முதல் புதுச்சேரி பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை!




புதுவையில் இன்புளூயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து, நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் தற்போது இன்புளூயன்சா காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காற்றில் பரவும் தன்மை கொண்டதால் இதன் பரவல் விகிதம் அதிகரித்து வருகிறது. காய்ச்சலைக் கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை 3 பிரிவாக பிரித்து மிக தீவிரமாக இருப்பவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அத்துடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.


மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அத்துடன் சமூக இடைவெளி , முகக்கவசம் இவைகளை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்த காய்ச்சல் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் அதிகம் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


 


இதன் அடிப்படையில் நாளை மார்ச் 16ம் தேதி வியாழக்கிழமை முதல் மார்ச் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 10 நாட்கள் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது. துச்சேரியில் சமீபகாலமாக வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாலும், இதனால் ஏராளமானோர் பாதிப்படைந்துள்ளதாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog