இயற்பியல் பொதுத் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினம் பிளஸ் டூ மாணவர்கள் பேட்டி




மேட்டுப்பாளையம்:இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் சற்று கடினமாக இருந்தது என்று பிளஸ் டூ மாணவர்கள் கூறினர்.பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.



மேட்டுப்பாளையம் தாலுகாவில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய ஊர்களில் ஆறு இடங்களில் பொதுத்தேர்வு மையங்கள் உள்ளன. இந்த மையங்களில், 28 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். நேற்று இயற்பியல் தேர்வு நடைபெற்றது.யோகராஜ், மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேட்டுப்பாளையம்.இயற்பியல் கேள்வித்தாளில், ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து மதிப்பெண்கள் கேள்விகள் இடம் பெற்றிருந்தன. இதில் ஒரு மதிப்பெண் கேள்விகள், பாடத்தின் உள்ளே இருந்து, அதிகளவில் கேட்கப்பட்டிருந்தன.


அதனால் அந்த கேள்விகள் சற்று கடினமாக இருந்தது. மற்ற இரண்டு, மூன்று, ஐந்து மதிப்பெண் கேள்விகள் எல்லாம், புக் பேங்கில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.கேசினி, அரசு மேல்நிலைப்பள்ளி மேட்டுப்பாளையம்.இயற்பியல் தேர்வில், ஒரு மதிப்பெண் கேள்விகள் சற்று கடினமாக இருந்தது. மூன்று, ஐந்து மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன.


டயகிராம் போடுவதை விட, கணக்கு கேள்விகள் அதிக அளவில் கேட்கப்பட்டிருந்ததால், நேரம் பற்றாக்குறை ஏற்பட்டது. இருந்த போதும் அவசரமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி முடிக்க வேண்டியிருந்தது. ஆனால் எழுதிய பதில்களை மீண்டும் ஒருமுறை திருப்பி பார்க்கக்ககூட நேரம் இல்லை. எழுதிய வரை நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog