UGC NET Exam Results : யூஜிசி நெட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? முக்கிய தகவல் இதோ!!!



UGC - NET தேர்விற்கான உத்தேச விடைத்தொகுப்பு முறையீடு முடிந்த இரண்டொரு நாட்களில் அதிகாரப்பூர்வ தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிடும்


2022 வருட டிசம்பர் மாதத்துக்கான உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி தகுதித்தேர்வக்கான (UGC- NET Exam For Assistant Professor’ as well as ‘Junior Research Fellowship and Assistant Professor) உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Answer Keys) விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விடைக் குறிப்புகள்: முன்னதாக,  2022 வருட டிசம்பர் மாதத்துக்கான உதவிப் பேராசிரியர் மற்றும் அல்லது இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதித்தேர்வை (UGC- NET Exam For Assistant Professor’ as well as ‘Junior Research Fellowship and Assistant Professor) பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. இதற்கான எழுத்துத் தேர்வு, பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.


இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்விற்கான உத்தேச விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட இருக்கிறது. உத்தேச விடைத்தொகுப்புடன் (Provisional Answer keys) தேர்வரின் விடைகள் (attempted recorded responses) வெளியிடப்படும். இதன் மூலம், தேர்வர்கள் தாங்கள் பெறப்போகும் மதிப்பெண்களை கணக்கீட்டுக் கொள்ள முடியும்.



Comments

Popular posts from this blog