நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது.. விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள முடியுமா..?




எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது..


நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் 2023 தேர்வு, மே 7-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.. இந்த நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு வரும்தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு – இளங்கலை (NEET-UG)க்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6-ம் தேதி இரவு 9:00 மணிக்கு முடிவடைய உள்ளது.. அதாவது நீட் தெர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. NTA NEET UG விண்ணப்பப் படிவம் 2023 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் – neet.nta.nic.in இல் கிடைக்கிறது.


 

நீட் தேர்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்வதற்கான படிகள்


https://neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

முகப்புப் பக்கத்தில் உள்ள NEET(UG) 2023 Registration’ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். போர்ட்டலில் உங்களைப் பதிவு செய்யுங்கள்.

உள்நுழைய விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

NEET விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்

ஆன்லைன் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவும். எதிர்கால குறிப்புக்காக விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன் உங்கள் புகைப்படங்களையும் கையொப்பத்தையும் சரிபார்க்கவும். புகைப்படம் அல்லது கையொப்பம் மங்கலாக இருந்தால், மாணவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.. மேலும் திருத்தம் செய்வதற்கான விருப்பம் அனுமதிக்கப்படாது.


விண்ணப்பதிவு முடிந்த உடன், நீட் விண்ணப்பப் படிவத்தைத் திருத்துவதற்கும் திருத்தங்களைச் செய்வதற்கும் தேசிய தேர்வு முகமை, விண்ணப்ப திருத்தச் சாளரத்தை அறிமுகம் செய்யும். அப்போது, விண்ணப்பத்தை பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்கள் அதில் மாற்றங்களைச் செய்யலாம். ஆனால் தற்போது வரை அதற்கான தேதி குறிப்பிடப்படவில்லை. எனினும் விண்ணப்ப திருத்தச் சாளரம் விரைவில் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது..


இதனிடையே தேசிய மருத்துவ ஆணையமான NMC நீட் தேர்வு பாடத்திட்டத்தை அறிவித்துள்ளது. கேள்வித்தாள் NMC இணையதளத்தில் (https://www.nmc.org) கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் (இணைப்பு-III) அடிப்படையில் இருக்கும். .in/neet/neet-ug). நீட் தொடர்பான கூடுதல் விளக்கங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் 011-40759000 அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.


Comments

Popular posts from this blog