மே 8ம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள்! - அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு




பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இதனால் பொதுத்தேர்வு முடிவுகளை வேறு தேதியில் அறிவிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.


இதனை தொடர்ந்து நேற்று இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 'மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறுகின்றது. ஏற்கனவே திட்டமிட்டபடி மே 5ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டால், மாணவர்களின் மனம் பாதிக்கப்படலாம் என்பதால், நீட் தேர்வுக்கு பிறகு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும். மே 7 ஆம் தேதி மாலை அல்லது மே 8 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தார்.


 


இந்த நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடபப்டுவது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், திங்கட்க்கிழமையான் மே 8 ஆம் தேதி அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்கில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.


மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in ,www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


 


மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres),அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் கட்டணமின்றி பார்த்து தெரிந்துகொள்ளலாம்.


Comments

Popular posts from this blog