நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..



இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.



நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை மூலம் இளநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


தற்போதைய நடப்பு ஆண்டு நீட் தேர்வுக்கான விண்ணப்பம் ஆன்லைனில் மார்ச் 6 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று ( ஏப்ரல் 13) நள்ளிரவு 11.30 மணியுடன் முடிவடைகிறது. 2023-24 ஆம் ஆண்டின் நீட் தேர்வு மே -7 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

Comments

Popular posts from this blog