வெளியானது உதவி வனப் பாதுகாவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்... பதிவிறக்கம் செய்வது எப்படி?




உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாள் 13.12.2022-ன் வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு வனப்பணி உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு (கணினி வழித் தேர்வு) மே 5 ஆம் தேதி முற்பகல் மட்டும் நடைபெற உள்ளது.



தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog