டி.என்.பி.எஸ்.சி. மூலம் மின் வாரியத்தில் 200 காலியிடங்கள் நிரப்ப ஒப்புதல்



அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களில் வரும் மின்சார வாரியத்தின் காலிப் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்பட உள்ளன. அதற்கான அறிவிப்பை தமிழக அரசின் எரிசக்தி துறை அரசாணையாக வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 107வது வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், 400 உதவி எலக்ட்ரிக்கல் என்ஜினீயர், 50 உதவி மெக்கானிக்கல் என்ஜினீயர், 60 உதவி சிவில் என்ஜினீயர், 600 எலக்ட்ரிக்கல் தொழில்நுட்ப உதவியாளர், 300 இளநிலை உதவியாளர், 8 ஆயிரம் கள உதவியாளர் என மொத்தம் 10 ஆயிரத்து 260 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 


அரசு கவனமாக பரிசீலித்து சென்னை உயர்நீதி மன்றத்தின் ஆணைகளுக்கு மதிப்பளித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 10,260 இடங்களில் 200 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி.யை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உடனடியாக அணுகும். மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தன்னுடைய மனிதவளக் கொள்கையை வகுக்க அவசர நடவடிக்கை எடுக்க இருக்கிறது.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog