புதுச்சேரியில் இந்த ஆண்டும் ஆல்பாஸ்: என்னவாகும் கல்வித்தரம்?




கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் புதுச்சேரி மாநிலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்று புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.


புதுச்சேரி கல்வித்துறை இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுகின்றனர். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 35% மதிப்பெண் பெற்று இருந்ததால் அந்த மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். 


ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான தேர்ச்சி பட்டியலை கல்வித்துறைக்கு மே 8-ம் தேதிக்குள் அனைத்து பள்ளி முதல்வர்களும் அனுப்ப வேண்டும். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வியாழக்கிழமை (ஏப்.20) முதல் கோடை விடுமுறை தொடங்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு அமலில் இருந்ததால் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த இயலாத சூழ்நிலை இருந்தது. அதனால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 


ஆனால் இந்த ஆண்டு அப்படி எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று கல்வி பயின்றனர். அப்படி இருக்கும்போது அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி என்று அறிவிப்பது கல்வித் தரத்தை பெரிதும் பாதித்துவிடக்கூடும் என்று கல்வியாளர்கள் அஞ்சுகின்றனர்.

Comments

Popular posts from this blog