இன்று தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு..!! 9.22 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்




எ.ஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவியருக்கான பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெற இருக்கிறது.


இந்த தேர்வை தமிழ்நாட்டில் இருந்து 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்களும், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகளும் என மொத்தம் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 பேரும், புதுச்சேரியில் இருந்து 7 ஆயிரத்து 911 மாணவர்களும், 7 ஆயிரத்து 655 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 566 பேரும் பள்ளி மாணவர்களாக எழுத இருக்கின்றனர்.


இதுதவிர தனித்தேர்வர்களாக 26 ஆயிரத்து 352 மாணவர்கள், 11 ஆயிரத்து 441 மாணவிகள், 5 திருநங்கைகள் என மொத்தம் 37 ஆயிரத்து 798 பேரும் எழுதுகின்றனர். ஆக மொத்தம் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுத உள்ளனர்.


மேலும் சிறைக்கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 151 பேரும் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4 ஆயிரத்து 25 மையங்களில் 12 ஆயிரத்து 639 பள்ளிகளில் தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 


தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் மட்டும் 46 ஆயிரத்து 870 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையங்களில் செல்போன், கணினி, கால்குலேட்டர் போன்றவை எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.


 

அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. மேலும் மையங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்து உள்ளது.


 கல்வி துறை அதிகாரிகள் மாவட்ட வாரியாக மாவட்டங்கள் தோறும் சென்று தேர்வு பணியினை ஆய்வு செய்கிறார்கள். மேலும் தேர்வு எழுதும் மாணவர்கள், பொதுமக்கள் புகார்கள் கருத்துக்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு நேரங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். 9498383081, 9498383075 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில் இதற்காக 3976 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் தனியார் பள்ளிகளில் 180 தேர்வு மையங்களும் அடங்கும்.


 புதுச்சேரியில் 287 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுத 49 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனையில் ஈடுபடவும் 3100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட உள்ளனர்..

Comments

Popular posts from this blog