ஒரே நேரத்தில் 1.70 லட்சம் ஆசிரியர்களுக்கு பணி.! பீகார் அரசு அதிரடி அறிவிப்பு.!




கல்வித்தரத்தை உயர்த்த ஒரே நேரத்தில் 1,70,461 ஆசிரியர்களை பணியமர்த்த உள்ளதாக, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார்.



நிதி ஆயோக் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, நாடு முழுவதும் உள்ள 20 மிகப்பெரிய மாநிலங்களில் கல்வித்தரத்தில் 19வது இடத்தில் பீகார் உள்ளது.



இந்நிலையில், முதன்மை ஆசிரியர்: 79943 பேர், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்: 32916 பேரும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்: 57602 பேர் என மொத்தம் 1,70,461 ஆசிரியர்களை பணியமர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த காலிபணியிடங்களுக்கு பீகார் மாநிலத்தில் இருக்கும் தகுதியுடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


விண்ணபிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் bpsc.bihar.gov.in என்ற BPSC இணையத்தில் சென்று விண்ணபிக்கலாம்.

Comments

Popular posts from this blog