5 ஆண்டு சட்ட படிப்புக்கு விண்ணப்பம்.



  சட்டப் பல்கலையில் ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையின் இணைப்பில், 15 அரசுக் கல்லுாரிகள், ஒன்பது தனியார் கல்லுாரிகள் செயல்படுகின்றன.


இவை தவிர, பல்கலை.யின் நேரடி கட்டுப்பாட்டில், சீர்மிகு சட்டக் கல்லுாரியும் செயல்படுகிறது.


இந்த கல்லுாரிகளில், பி.ஏ., ---- எல்.எல்.பி., ஐந்தாண்டுப் படிப்பு நடத்தப்படுகிறது.


 சீர்மிகு சட்டக் கல்லுாரியில், எல்.எல்.பி.,யுடன் இணைந்த பி.ஏ., - பி.பி.ஏ., - பி.காம்.,மற்றும் பி.சி.ஏ., ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.


இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு, இன்று துவங்குகிறது;


வரும் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


பிளஸ் 2 இல், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர், குறைந்தபட்சம், 40 சதவீதம், மற்றவர்கள், 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


கூடுதல் விபரங்களை, www.tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Comments

Popular posts from this blog