60,000க்கும் மேற்பட்டோர் அரசு தொடக்கப் பள்ளிகளில் சேர விண்ணப்பம்... பள்ளிக்கல்வித்துறை தகவல்!!




அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 60,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.



தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் முதல் தொடங்கப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஏப்.17 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.


இதையடுத்து மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 60,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கி இருப்பதால், மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு கால அவகாசம் எதுவும் விதிக்கப்படவில்லை. ஆனால் அரசு பள்ளிகளில் ஆகஸ்டு மாதம் வரை மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog