புதுச்சேரி பல்கலையில் சேர இன்று வரை விண்ணப்பிக்கலாம்



புதுச்சேரி பல்கலையில் முதுகலை மற்றும் பட்டய படிப்புகளுக்கு இன்று வரை விண்ணப்பிக்கலாம்.

பல்கலைக்கழக உதவி பதிவாளர் மகேஷ் செய்திக்குறிப்பு:தேசிய தேர்வு முகமை நடத்தும் பல்கலை பொது நுழைவுத் தேர்வு கியூட் (பி.ஜி) - 2023ன் அடிப்படையில் புதுச்சேரி பல்கலையில் பல்வேறு முதுகலை மற்றும் பட்டய படிப்புகளில் சேரலாம்.இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் கடந்த 5ம் தேதி வரை இணைய வழியில் பெறப்பட்டது.


இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு முதுகலை மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க, காலக்கெடு இன்று 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்களில் திருத்தங்களை நாளை முதல் 13ம் தேதி வரை செய்யலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog