ஒரே நேரத்தில் பல்கலை. தேர்வு முடிவுகள்!!




தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வரும் காலங்களில் தேர்வும், தேர்வு முடிவுகளும் ஒரே நாட்களில் அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்


கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர்களோடு அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். 2023-24 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, பாடத்திட்டம் மாற்றியமைப்பு, பல்கலைக்கழகங்களில் கட்டண நிர்ணயம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.



இந்த கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 19 பல்கலைக்கழக துணைவேந்தர்களும், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடம் 4 செமஸ்டர்களிலும் கட்டாயம் பின்பற்றப்படும் என்றும், தமிழுக்கு ஒரு குழுவும் ஆங்கில மொழி பாடத்திற்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.


 


தற்போது ஒரே நேரத்தில் பல்கலை. தேர்வு முடிவுகள்!!அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தேர்வுகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெவ்வேறு தேதிகளில் அறிவிக்கப்படுகின்றன. அதைமாற்றி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவது போல்  அனைத்து பல்கலைக்கழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஒரேநாளில் தேர்வு நடத்தி, ஒரே நாளில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Comments

Popular posts from this blog