எம்.எஸ்சி. படிப்புக்கு 26-க்குள் விண்ணப்பிக்கலாம்



M.Sc., படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்க மாணவர்கள் மே 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அண்ணாபல்கலை. தெரிவித்துள்ளது.


சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி (CEG) மற்றும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி (MIT) இயங்கி வருகின்றன. இவற்றில் எம்.எஸ்சி. (2 ஆண்டு) படிப்பில் சேருவதற்கு பல்கலைக்கழகம் நடத்தும் பிரத்யேக நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் அடிப்படையில் மாணவர்சேர்க்கை நடத்தப்படும். அந்தவகையில் நடப்பு கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது.


இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. இப்படிப்பில்சேர விருப்பமுள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளம் வழியாக மே 26-ம் தேதிமாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 


இதில் தகுதியானமாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும்.


இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://cfa.annauniv.edu/cfa/msc22.html  என்ற வலைதளத்தில் அறிந்துகொள்ளலாம். 


மேலும்  044-22358314

/358276 என்ற தொலைபேசி எண் அல்லது dircfa@annauniv.edu என்ற மின்னஞ்சலைதொடர்பு கொள்ளலாம் என்றுஅண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


PROGRAMME OFEERED


MIT


1. Mathematics


College of Engineering

Guindy


Mathematics

Material Science

Medical Physics

Applied Chemistry

Applied Geology

Electronic Media

Multimedia(Specialization in Visual Communication)


IMPORTANT DATES


Commencement of Online Registration of Applications 

26.04.2023 

(5.00 P.M)


Commencement of Online Payment of Registration Fee and Online Uploading of Documents 

28.04.2023 

(5.00 P.M)


Last date for Registration and Online Submission 

26.05.2023 

(5.00 P.M)


Date of Entrance Examination 

04.06.2023

Comments

Popular posts from this blog