TNTET ஆசிரியர் நியமனத்தேர்வுக்கான பாட திட்டம் – வெளியான முக்கிய அப்டேட்!


தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமத்திற்காக நடத்தப்படும் TET தேர்வு குறித்த முக்கிய தகவல்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


TNTET ஆசிரியர் தேர்வு:

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான வயது வரம்பு அண்மையில் 57 ஆக உயர்த்தப்பட்டது. இதனால், ஆசிரியர் தேர்வுக்கு அதிக அளவிலானவர்கள் போட்டி போட்டு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ஆசிரியர்கள் நியமனத்திற்காக நடத்தப்பட்ட TNTET தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மீண்டும் அதன்பிறகு நடத்தப்படும் நியமனத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால் இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிக அளவில் கோரிக்கைகள் எழுந்து வந்தது. இந்நிலையில், கடந்த மே 22ம் தேதி அன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் நியமனத்தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் நியமனத்தேர்வுக்கான பாடத்திட்டதின், https://www.trb.tn.gov.in/syllabus_view.php?tid=STC-12&language=LG-1&status=Active என்ற லிங்க் வெளியிடப்பட்டுள்ளது.


ஆனால் இந்த பக்கத்தில் பாடத்திட்டம் எதுவும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனினும், விரைவில் பாடத்திட்டம் பதிவேற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன்மூலம் அரசு நியமனத்தேர்வு குறித்த பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவது உறுதியாகியுள்ளது.

Comments

Popular posts from this blog