தமிழ்ப் பல்கலையில் பி.எட்., எம்.எட். நேரடி சேர்க்கை!



தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2023 - 2024ஆம் கல்வியாண்டுக்கான பி.எட்., எம்.எட். நேரடிச்சேர்க்கை தொடங்கி நடைபெறுகிறது.


இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) சி. தியாகராஜன் தெரிவித்தது: 


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (பி.எட்.) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞர் (எம்.எட்.) இரண்டாண்டு முழுநேரப் பட்டப் மேற்படிப்பில் 2023 - 2024 ஆம் கல்வியாண்டுக்கான நேரடிச் சேர்க்கை ஜூன் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டது.


சேர்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் ஜூலை 31 வரை நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியிலும் பெற்றுக் கொள்ளலாம்.


மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்திலும், 04362 - 226720 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog