Supplementary Exam Hall Ticket: 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஹால்டிக்கெட் எப்போது?- வெளியான அறிவிப்பு




மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகளை ஜூன் 20ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.



அத்துடன் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளுதல் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


’’மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன், ஜூலை மாதங்களில் துணைத் தேர்வு நடைபெற உள்ளது. துணைத் தேர்வு எழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களும் (தட்கல் உட்பட) 20.06.2023 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தேர்வர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்திற்குச் சென்று “HALL TICKET என்ற வாசகத்தினை CLICK செய்த பின்னர் தோன்றும் பக்கத்தில் "HSE FIRST YEAR / SSLC - JUNE/JULY 2023) SUPPLEMENTARY EXAMINATION — HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தை "Click" செய்ய வேண்டும். 


அதை அடுத்து தோன்றும் பக்கத்தில், தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்ப எண் (APPLICATION NUMBER) அல்லது நிரந்தரப் பதிவெண் (PERMANENT REGISTER Number) மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.


பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் 22.06.2023 (வியாழக்கிழமை) முதல் 23.06.2023 ( வெள்ளிக்கிழமை) வரையிலான நாட்களில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும், இத்தேர்வர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே செய்முறைத் தேர்வு நடத்தப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை, சம்பந்தப்பட்ட

மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளுமாறு கண்டிப்பாக அறிவுறுத்தப்படு கிறார்கள்.


உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்’’.


இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


கூடுதல் விவரங்களுக்கு: www.dge.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


தேர்வில் தோல்வி அடைந்த/ வருகை புரியாத மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வர்கள் மே 23 முதல் 27 ஆம் தேதி வரை துணை தேர்வுக்கு விண்ணப்பித்தனர். மேலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் மே 26 ஆம் தேதி முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்களிலும் பெற்றுக் கொண்டனர்.


அதேபோல் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வானது ஜூன் 27 ஆம் தேதி முதல் நடக்க உள்ளது. இதற்கு கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular posts from this blog