புதுச்சேரியில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் ஆரம்பம்; கடைசி தேதி ஜூலை 18..



புதுச்சேரியில்,  MBBS/ BDS/ BAMS/ B.V.Sc & AH (SS & NRI) படிப்புகளுக்கான சேர்க்கை கல்வியாண்டு-2023-24 NEET UG தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இது குறித்து புதுச்சேரி அரசு உயர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் சேர்க்கை குழு (CENTAC) என்று அழைக்கப்படும் சென்டாக் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி உள்ளதாவது,


புதுச்சேரியில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவம் / பல் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் புதுச்சேரி அரசு / அகில இந்திய ஒதுக்கீடு (மேலாண்மை)/ என்.ஆர்.ஐ மற்றும் சுய-ஆதரவு (SS) ஒதுக்கீட்டின் கீழ் முதல் ஆண்டு MBBS/ BDS/ BAMS மற்றும் B.V.Sc & A.H படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மேலும் விவரங்களுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.


மாணவர்கள் அகில இந்திய கவுன்சிலிங்கில் கலந்துக் கொள்கிறார்கள் என்பதை குறிப்பிட விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது NEET ரேங்கை குறிப்பிட வேண்டும்.


B.V.Sc படிப்பில் தேசிய அளவில் சுய ஆதரவு பிரிவில் சேர்க்கை கோரும் OBC விண்ணப்பதாரர்கள் OBC அல்லாத கிரீமிலேயர் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.


ஆன்லைன் விண்ணப்பச் செயல்முறை தொடங்ககிய நாள்: 12.07.2023. விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.07.2023 ஆகும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog