ஜூலை 20 முதல் குருப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு!!




தமிழகம் முழுவதும் பல்வேறு நிலைகளில் அரசு பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.



கொரோனா காரணமாக நடத்தப்படாமல் இருந்து வந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கடந்த ஆண்டு முதல் மீண்டும் பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்டு வருகிறது. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தெரிவித்துள்ளது.


 

கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினர். இந்தத் தேர்வின் மூலம், 7000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை 10,748 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் 25ம் தேதி வெளியானது. குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 20ம் தேதி முதல் பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 


முதல் கட்டமாக குரூப் 4 முலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சான்றிதழ்களின் அடிப்படையில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, பணி ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி மற்றும் விபரங்கள் தேர்வு செய்யப்பட்டவட்ர்களுக்கு தனிப்பட்ட மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog