முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் விவரத்தை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு



கரூர் மாவட்டம் சின்னாண்டன் கோவில் பகுதியை சேர்ந்த ரமேஷ் , மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருந்ததாவது : கடந்த 2021 - ம் ஆண்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன அறிவிப்பு வெளியானது. 


கணித ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதினேன். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தனர். ஆனால் இறுதியாக ஆசிரியர் பணிக்கு தேர்வானவர் பட்டியலில் ' எனது பெயர் இல்லை காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இதே நேரத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு தேர்வு எழுதி , அதில் வெற்றி பெற்ற சிலர் , பட்டதாரி ஆசிரியர் பணியை விட்டுவிட்டு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சென்றுவிட்டனர்.



 இதனால் சுமார் 300 பணியிடங்கள் மீண்டும் காலியானது. இந்த இடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்க வேண்டும் என்பது விதி.


 இதற்கான நடவடிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் எடுக்காமல் , அந்த இடங்களை காலியாகவே வைத்திருக்கிறது. இது ஏற்புடையதல்ல எனவே அந்த காலி இடங்களுக்கு என்னை போன்ற காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்க உத்தரவிடல் வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசார ணைக்கு வந்தது. முடிவில் , கடந்த 28.8.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான இறுதி பட்டியலின் அடிப்படையில் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர். எத்தனை பேர் பணியில் சேரவில்லை ? என்பது குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதிலாக அளிக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார் . விசாரணையை வருகிற 4 - ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Comments

Popular posts from this blog