6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு



தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.



அதன்படி, 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல, அரையாண்டு தேர்வானது டிசம்பர் 11 ஆம் தேதி முதல் டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 3 வது வாரத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், 6 முதல் 9 ஆம் வகுப்புக்கான பருவத் தேர்வுகள் மற்றும் 10,11,12 ஆம் வகுப்புக்கான அலகு, திருப்புதல் தேர்வு ஆகியவை தொடர்பான முழு அட்டவணையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. எனவே, இந்த தேர்வு அட்டவணைக்கு ஏற்ப மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog