சென்னை பல்கலை., தொலைதூர கல்விக்கான மாணவர் சேர்க்கை!!




சென்னை பல்கலைக்கழகத்தில் ஜூலை 5 முதல் தொலைதூர கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை.நிர்வாகம் அறிவித்துள்ளது.


சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை (எம்பிஏ உட்பட), டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் (யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) வழங்கப்பட்டு வருகின்றன.


 சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை, முதுகலை (எம்பிஏஉட்பட), டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கான (யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.


இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி நிறுவனத்தில், 2023-24ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை. நிர்வாகம் அறிவித்துள்ளது.


 இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 1) இளங்கலை / முதுகலை / முதுகலை கணினி பயன்பாடு / முதுகலை பட்டயப்படிப்பு / பட்டயப்படிப்பு & சான்றிதழ் மற்றும்


 2) முதுகலை வணிக நிர்வாகவியல் 


3) இளங்கலை கல்வியியல் ஆகியவற்றிற்குரிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 05..07.2023 முதல் வழங்கப்படும். மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்திலுள்ள ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையத்தின் வழி சேர்ந்து பயனடையலாம். 


இந்த மையம் சனி மற்றும் ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் செயல்படுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் இணைய வழி : http://online.ideunom.ac.in/ மூலமாகவும் சேரலாம்.


 சேர்க்கைகள் சென்னைப் பல்கலைகழக 64 கற்றல் உதவி மையம் மூலமாக சேரலாம். இதற்கான விபரங்களை இணையதளம்: www.ideunom.ac.in மூலமாக அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog