உதவி பேராசிரியராக நெட், செட், ஸ்லெட் தேர்வில் ஒன்று கட்டாயம்: யுஜிசி அறிவிப்பு




உதவிப் பேராசிரியர் பணிக்கு நெட், செட், ஸ்லெட் ஆகிய தேர்வுகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும்.



இது கடந்த ஜூலை1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. அதன்படி, இனி, பி.எச்டி முடித்தாலும், முடிக்க வில்லை என்றாலும் இந்த தகுதித்தேர்வுகளில் தகுதிப்பெற்றிருக்க வேண்டும்.


இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட அறிக்கை: தேசிய தகுதித் தேர்வு (நெட்), மாநிலத் தகுதித் தேர்வு (செட்), மாநில அளவிலான தகுதித் தேர்வு (எஸ்எல்இடி) ஆகியவை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கான உதவிப் பேராசிரியர் பணிக்கு கட்டாயம். 


இது கடந்த ஜூலை1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.நெட், செட், ஸ்லெட் ஆகிய தேர்வுகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


2021ம் ஆண்டு பி.எச்.டி., முடித்தால் உதவி பேராசிரியராக பணியாற்றலாம் என யுஜிசி கொண்டு வரப்பட்ட விதியிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


 யு.ஜி.சி தலைவர் மமிதாலா ஜெகதேஷ் குமார், 'உதவி பேராசிரியராக பணி நியமனம் செய்வதற்கான பி.எச்டி தகுதி விருப்பத்தேர்வாக இருக்கும்' என்றும் தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது, பி.எச்டி முடித்தாலும், முடிக்கவில்லை என்றாலும், மேற்கூறிய தகுதித் தேர்வுகளில் ஒன்றில் தகுதிப் பெற்றிருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog