எம்.பி.பி.எஸ் நெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!!




தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் நடைபெறவிருந்த நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.


தேசிய மருத்துவ ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் வரும் ஜூலை 28ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவிருந்த நெக்ஸ்ட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்திடமிருந்து அடுத்த உத்தரவு வரும் வரை நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக நெக்ஸ்ட் தேர்வு செயலாளர் அறிவித்துள்ளார்.


 


நாடு முழுவதும் தற்பொழுது இயற்கை சீற்றம், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது, மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.


ஜூலை 20ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப திட்டமிட்டு இருந்தன.


 


இந்த நிலையில் காரணம் ஏதும் தெரிவிக்கப்படாமல் எம்பிபிஎஸ் நெக்ஸ்ட் தேர்வானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி நெக்ஸ்ட் தேர்வு விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இறுதி முடிவு எடுக்க ஆலோசனையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog