தமிழகத்தில் ஆசிரியர் பணியிடத்திற்கு போட்டித்தேர்வு கட்டாயம் – அரசு திட்டவட்டம்!




தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கட்டாயமாக போட்டித்தேர்வு எழுத வேண்டும் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் தகுதி தேர்வு:

தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு தற்போது வரையிலும் பணி நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு நேரடி நியமனம் செய்யப்படாது எனவும், போட்டித் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மட்டுமே தகுதியான ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.



இதனால், தமிழகத்தில் உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தற்போது முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் திட்டவட்டமாக பதில் அளித்துள்ளார்.



அதாவது, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கல்வித் தகுதிகளில் ஒன்றாக மட்டுமே கருதப்படும் எனவும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு கட்டாயமாக போட்டி தேர்வின் அடிப்படையில் மட்டுமே பணியிடம் நிரப்பப்படும் எனவும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Comments

Popular posts from this blog