எல்.டி.சி., தேர்வு 'ஹால்டிக்கெட்' பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தல்




புதுச்சேரி,-எல்.டி.சி., எழுத்து தேர்வுக்கு நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அரசு சார்பு செயலர் (தேர்வு பிரிவு) செய்திக்குறிப்பு:புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மூலம் 165 (எல்.டி.சி.) கீழ் நிலை எழுத்தர் மற்றும் 55 (ஸ்டோர் கீப்பர்) பண்டக காப்பாளர் நிலை-111 பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்து தேர்வு வரும் 27ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது.புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியைச் சேர்ந்த 46,904 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.



விண்ணப்பதாரர்கள், தேர்வுக்கான நுழைவுச் சீட்டை https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் இருந்து கடந்த 17ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.


தேர்வுக்கு இன்னும் இரு நாட்களே உள்ளதால் இதுவரை நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், விவரங்களுக்கு காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog