ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் உதவித்தொகை தகுதித்தேர்வு!!!



முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்துக்கு ரூ.12 கோடியே 31 லட்சத்து 80 ஆயிரத்தை ஒதுக்கி உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணை:கல்லூரிக் கல்வி இயக்குனர் கலை, மனிதவளம் மற்றும் சமூக கல்வியில் படிக்கும் 100 மாணவர்களுக்கும், அறிவியல் பிரிவில் 100 மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் வழங்க கேட்டிருந்தார். அதன்படி, ஒவ்வொரு பிரிவிலும் தலா 60 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


அதன்படி, முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை கலை, மனிதவளம் மற்றூம் சமூக கல்வியில் ஆராய்ச்சி படிப்பை படிக்கும் 60 மாணவர்களுக்கும், அறிவியல் பிரிவுகளில் படிக்கும் 60 மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் 25 ஆயிரம் வீதம் வழங்கப்படும். மேலும் ஆராய்ச்சி தற்காலிக உதவித்தொகையாக 3 ஆண்டுகளுக்கு கலை, மனிதவளம் மற்றூம் சமூக கல்வியில் ஆராய்ச்சி படிப்பை படிக்கும் 60 மாணவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வீதமும், அறிவியல் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வீதமும் வழங்கப்படும். இதுதவிர மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதலாக மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும்.அந்த வகையில் இதற்காக 3 ஆண்டுகளுக்கு ரூ.12 கோடியே 31 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுகிறது. 


இந்த உதவித்தொகையை பெறுவதற்கு மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்கவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முதுகலை படிப்பில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். தகுதியானவர்கள் மாநில அளவில் தகுதித்தேர்வு வைத்து தேர்வு செய்யப்படுவார்கள். 


இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும். இந்த உதவித்தொகை திட்டத்துக்காக பிரத்தியேக இணையதளமும் உருவாக்கப்படுகிறது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Comments

Popular posts from this blog