ஜேஇஇ முதன்மைத் தேர்வு: நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்!



ஐஐடி என்ஐடி போன்ற மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். 


அந்த வகையில் ஜேஇஇ முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், பிறகு மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்தேர்வு எழுத முடியும். ஜேஇஇ மெயின் தேர்வு வரும் ஜனவரி-பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்


2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு (JEE Main, Session 1, exam) ஜனவரி 24 முதல் பிப்.1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 


விருப்பமுள்ள மாணவர்கள் இந்த முதல் அமர்வுக்கு https://jeemain.nta.nic.inஎன்ற இணையதளம் வழியாக நவ.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 


இதன் முடிவுகள் பிப்.12-ம் தேதி வெளியிடப்படும்.


இதுகுறித்த கூடுதல் விவரங்களை/nta.ac.in/என்ற வலைதளத்தில் அறியலாம்.


011-40759000 / 69227700 என்ற எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


JEE முதன்மை தேர்வுக்கு இந்த சான்றிதழ் கட்டாயம் : மாணவர்கள் அவதி


JEE முதன்மை தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவில் மாணவர்கள் கட்டாயம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான OBC Non creamy layer சான்றிதழை கட்டாயம் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளதால் விண்ணப்பிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது


அந்த வகையில், ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 


இந்த நிலையில் முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் non creamy layer சான்றிதழை கட்டாயமாக இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog