கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள இடங்களுக்கு டிச. 24ந்தேதி எழுத்துத் தேர்வு!





இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளம் வாயிலாக டிச. 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.



தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் கூட்டுறவு பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கிப் பணியாளா் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளா் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்தக் கூட்டுறவு சங்கங்களில் தற்போது 2,257 உதவியாளா் மற்றும் இளநிலை உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


சென்னையில் அதிகபட்சமாக 132 இடங்கள் காலியாக உள்ளன. அரியலூா் - 28, செங்கல்பட்டு - 73, கோவை - 110, திண்டுக்கல் - 67, ஈரோடு - 73, காஞ்சிபுரம் - 43, கள்ளக்குறிச்சி - 35, கன்னியாகுமரி - 35, கரூா் - 37, கிருஷ்ணகிரி - 58, மயிலாடுதுறை - 26, நாகப்பட்டினம் - 8, நீலகிரி - 88, ராமநாதபுரம் - 112, சேலம் - 140, சிவகங்கை - 28, திருப்பத்தூா் - 48, திருவாரூா் - 75, தூத்துக்குடி - 65, திருநெல்வேலி - 65, திருப்பூா் - 81, திருவள்ளூா் - 74, திருச்சி - 99, ராணிப்பேட்டை - 33, தஞ்சாவூா் - 90, திருவண்ணாமலை - 76, கடலூா் - 75, பெரம்பலூா் - 10, வேலூா் - 40, வேலூா் - 40, விருதுநகா் - 45, தருமபுரி - 28, மதுரை - 75, நாமக்கல் - 77, புதுக்கோட்டை - 60, தென்காசி - 41, தேனி - 48, விழுப்புரம் - 47 என மாவட்ட வாரியாக காலியிடங்கள் உள்ளன.


காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோவில் பங்கேற்க, இளநிலை பட்டப் படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்து இருக்க வேண்டும். ராணுவத்தில் பணிபுரிந்தவா்கள், ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப் படிப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.


கூட்டுறவுப் பயிற்சியைப் பொருத்தவரை தமிழ்நாடு ஒன்றிய கூட்டுறவு மூலம் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு பயிற்சி, சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயா் மேலாண்மை பயிற்சி முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.


18வயது முதல் 32வயது வரை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்ப சம்பளம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை: காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தோவு மற்றும் நேர்முகத் தோவு நடத்தப்படும். அதன் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரா்கள் தோவு செய்யப்படுவா். டிச. 24-ஆம் தேதி எழுத்துத் தோவு நடத்தப்படும்.


இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளம் வாயிலாக டிச. 1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog