இனி 2 ஆண்டு பிஎட் படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



அடுத்த கல்வியாண்டு முதல் 2 ஆண்டு பி.எட் படிப்பு நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது.


அடுத்த கல்வியாண்டு முதல் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட் (4 years integrated B.Ed., courses) படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சுற்றறிக்கை!


அடுத்த கல்வி ஆண்டு (2024-25) முதல் 2 ஆண்டு பி.எட் படிப்புக்கு புதிய அனுமதிகளை கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டாம் என்றும், 4 ஆண்டு பி.எட் திட்டத்தை நடத்த விரும்பும் கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


என்.சி.டி.இ., 2 ஆண்டு பி.எட். பாடத்திட்டத்தில் போதிய கல்வித் தகுதிகள் இல்லை. மாறாக, 4 ஆண்டு பி.எட். பாடத்திட்டம் கற்பித்தலை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், கல்வி ஆராய்ச்சி, குழந்தை உளவியல், கல்வித் தொழில்நுட்பம் மற்றும் பிற பாடங்களையும் எடுத்துக்காட்டுகிறது, 


தற்போது இளநிலைப் பட்டப் படிப்புக்கு 3 ஆண்டுகள், பி.எட். படிப்புக்கு 2 ஆண்டுகள் என 5 ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு மாற்றாக புதிய கல்விக் கொள்கையின் கீழ் 4 ஆண்டுகளில் இளநிலைப் பட்டப் படிப்பு, பி.எட். படிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை (ஐடிஇபி) மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிமுகம் செய்தது.


இந்த படிப்பில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய பொது நுழைவு தேர்வை எழுத வேண்டும்.


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நான்காண்டு ஒருங்கிணைந்த B.Ed பட்டப்படிப்பு கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த நான்காண்டு பட்டப்படிப்பில் பி.எஸ்.சி., பி.எட், பி.ஏ, பி.எட் ஆகிய பாடப்பிரிவில் ஆறு பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டு உள்ளது.


தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான பி.எட் பட்டப்படிப்பினை படிப்பதற்கு 10+2+3 என்ற அடிப்படையில் இளநிலை பட்டப் படிப்பினை முடித்திருக்க வேண்டும். ஆனால் தேசிய கல்விக் கொள்கையில், இளங்கலை பட்டப்படிப்புடன், பி.எட் பட்டப்படிப்பும் சேர்த்து நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.எட் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது.


அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகம் 2023-24 ஆம் கல்வி ஆண்டு ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் NCTE விதிமுறைகளின் படி பி.எஸ்.சி., பி.எட், பி.ஏ. பி.எட் படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog