தமிழக நகராட்சி, குடிநீர் வழங்கல் துறையில் 1933 காலி இடங்கள்: விண்ணப்பம் செய்வது எப்படி?





தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.



இந்நிலையில், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உள்ள 1933 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 


மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறைகளில் உள்ள 1933 காலிப் பணியிடங்களுக்கு வருகிற 9ம் தேதி முதல் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், உதவியாளர், உதவிப்பொறியாளர், இளநிலை பொறியாளர், வரைவாளர், துப்புரவு ஆய்வாளர் தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் ஜூன் 30-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை இந்த பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.tnmaws.ucanapply.com என்ற இணையதள பக்கம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 


மொத்த பணியிடங்கள் - 1933


உதவி பொறியாளர் (மாநகராட்சி - 146), உதவி பொறியாளர் (சிவில்/மெக்கானிக்கல் - 145), உதவி பொறியாளர் (நகராட்சி - 80), உதவி பொறியாளர் (சிவில்58), உதவி பொறியாளர் (மெக்கானிக்கல்) : 14, உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்71), உதவி பொறியாளர் (திட்டம்- மாநகராட்சி - 156), உதவி பொறியாளர் (திட்டம் - நகராட்சி - 12) , இளநிலை பொறியாளர் - 24, தொழில்நுட்ப உதவியாளர் - 257, வரைவாளர் (மாநகராட்சி - 35), வரைவாளர் (நகராட்சி - 130), பணிமேற்பார்வையாளர் - 92, நகர ஆய்வாளர் / இளநிலை பொறியாளர் (திட்டம்) : 367, துப்புறவு ஆய்வாளர் (மாநகராட்சி, நகராட்சி - 244). 


சம்பளம் 


ஆய்வாளர் பணிக்கு ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். மற்ற பணிகளுக்கு ரூ. 35,000 முதல் ரூ.1,38,500 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் வரும் 12.03.2024, மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை விண்ணப்பங்களை திருத்தலாம். அதன்பின்னர் திருத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog