தேர்தல் நடத்தை விதிகளால்.. போட்டித்தேர்வு நடத்துவதில் தாமதமா? டிஎன்பிஎஸ்சி சொல்வது என்ன?


லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் எந்த விதத்திலும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பாதிக்கப்படாது என டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கிய ராஜ் தெரிவித்துள்ளார்.


லோக்சபா தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற இருக்கிறது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால், புதிய திட்டங்களையோ, அறிவிப்புகளையோ வெளியிட வேண்டும் என்றால் அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று விட்டு தான் அறிவிப்பினை வெளியிட முடியும்.



தேர்தல் அறிவிக்கை வெளியாகிவிட்டால், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டால், அரசின் செயல்பாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் என்பதும் அமலுக்கு வந்துவிடும். எனவே தற்போது அரசு வேலைக்காக தேர்வுகளுக்கு படித்து வரும் தேர்வர்கள், லோக்சபா தேர்தலால் தேர்வுகள் தள்ளிப்போய்விடுமோ என அச்சமடைந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.


இப்படிப்பட்ட ஒரு சூழலில், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி. குரூப் - 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு அட்டவணை வெளியாகி இருக்கிறது. இதேபோல் பல நியமனங்களுக்கான பணிகளும் நடந்து வருகிறது. இப்படி ஒரு சூழலில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால், இது எந்த வகையிலாவது டிஎன்பிஎஸ்சி தேர்வை பாதிக்குமா? பணி நியமனங்களில் பாதிப்பு வருமா? தேர்வு நடத்துவதில் எதும் சிக்கல் வருமா? என்று பல்வேறு சந்தேகங்களை பட்டாதரிகள் டிஎன்பிஎஸ்சி அமைப்பிடம் கேட்டு வருகின்றனர்.


இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆரோக்கிய ராஜ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னாட்சி அங்கீகாரம் கொண்ட எஸ்எஸ்சி எனப்படும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் என்று சொல்லக்கூடிய மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இதேபோன்று டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தன்னாட்சி அங்கீகாரம் கொண்ட அமைப்புகளுக்கு எந்தவித வகையிலும் இந்த தேர்தல் நடத்தை விதிகள் பாதிப்பை ஏற்படுத்தாது.


பணி நியமனங்களோ, தேர்வு தொடர்பான பணிகளோ, பதவி உயர்வு அளிப்பதோ போன்றவற்றில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதேபோல் தன்னாட்சி அந்தஸ்து அல்லாத பிற அமைப்புகள் மட்டும் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற்று தான் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog