தமிழகம் முழுவதும் 2299 கிராம உதவியாளர் பணியிடங்கள். அரசு அறிவிப்பு




தமிழகத்தில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் ஒரு கிராம உதவியாளர் நியமனம் செய்யப்படுகிறார். கிராம நிர்வாக அலுவலரின் கீழ் கிராம உதவியாளர் செயல்பட வேண்டும்.


அடிப்படை கல்வியை மட்டுமே தகுதியாக கொண்ட இந்த பணிக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.


இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணிகளுக்கான பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக காலி பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


தகுதி: 5ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை

வயது வரம்பு: 21 முதல் 37க்குள் இருக்க வேண்டும்

வேலைக்கு விண்ணப்பிக்க: www.tn.gov.in

Comments

Popular posts from this blog