பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வு எளிது: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி



பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கிய நிலையில், தமிழ் பாடத் தேர்வு மிக எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.


தமிழகத்தில், புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 4,107 மையங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தத் தேர்வைவை பள்ளி மாணவா்கள், தனித்தேர்வா்கள் என மொத்தம் 9.26 லட்சம் தேர்வா்கள் எழுதுகின்றனா். முதல் தேர்வாக தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது. 


இது குறித்து மாணவா்கள் கூறுகையில், பொதுத்தேர்வை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளோம். தமிழ் பாடத்துக்கான வினாத்தாளில் ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் பகுதிகளில் தலா ஒரு வினா மட்டும் பாடப் பகுதிக்கு உள்ளிருந்து இடம்பெற்றிருந்தன. இருப்பினும் அந்த இரு கேள்விகளும் ஓரளவுக்கு எளிதாக இருந்தன. உரைநடை, கட்டுரை, படிவம், மனப்பாடப் பகுதி ஆகியவற்றில் இடம்பெற்றிருந்த அனைத்து கேள்விகளுக்கும் சராசரியாக  மாணவா்களால் கூட எளிதாக பதிலளிக்க இயலும். 


இதில் நிச்சயம் 90 முதல் 95 மதிப்பெண்களுக்கும் மேல் கிடைக்கும் என நம்புகிறோம் என அவா்கள் தெரிவித்தனா். 17,633 பேர் வரவில்லை: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் உள்ளிட்ட இதர மொழிப் பாடங்களின் தேர்வைவை பள்ளி மாணவா்கள் 16,314 பேர்; தனித்தேர்வா்கள் 1,319 பேர் என மொத்தம் 17,633 தேர்வா்கள் எழுதவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 


பத்தாம் வகுப்புக்கு அடுத்ததாக ஆங்கில பாடத்துக்கான தேர்வு வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. ஒட்டுமொத்தமாக ஏப்.8-ஆம் தேதியுடன் பொதுத்தேர்வு நிறைவடையவுள்ளது.

Comments

Popular posts from this blog