ரயில்வேயில் 6,180 காலிப்பணியிடங்கள்; ஜூன் 28 முதல் விண்ணப்பம் தொடக்கம் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?



இந்திய ரயில்வேயில் வேலைக்கு எதிர்பார்த்து காத்துகொண்டிருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ரயில்வே டெக்னீஷியன் பதவிகளுக்கான அறிவிப்பு (RRB Technician Grade I & III 2025) வெளியாகியு:ள்ளது. இந்தாண்டு மொத்தம் 6,180 காலிப்பணியிட்ங்களுக்கு ரயில்வே ஆட்சேர்ப்பு தேர்வாணையம் போட்டித்தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


ரயில்வேயில் டெக்னீஷியன் கிரேடு I Signal மற்றும் டெக்னீஷியன் கிரேடு III பதவிகள் நிரப்பப்பட உள்ளது. தேசிய அளவில் கிரேடு I பதவிக்கு 180 காலிப்பணியிடங்களும், கிரேடு III பதவிக்கு 6,000 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படுகிறது. இப்பதவிகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித்தகுதி, சம்பள விவரம் உள்ளிட்ட விவரங்களை இளைஞர்கள் அறிந்துகொள்ளலாம்.


பணியின் விவரங்கள்


பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்

டெக்னீஷியன் கிரேடு I Signal 180

டெக்னீஷியன் கிரேடு III 6,000

மொத்தம் 6,180

வயது வரம்பு


டெக்னீஷியன் கிரேடு I பதவிக்கு குறைந்தபட்சம் 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும். அதிகபடியாக 33 வயது வரை இருக்கலாம்.

அதே போன்று, டெக்னீஷியன் கிரேடு III பதவிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் 30 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி

சிக்னல் டெக்னீஷியன் பதவிக்கு இயற்பியல், எலெக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல்/ தகவல் தொடர்பியல்/ இன்ஸ்ரூமெண்டேஷன் ஆகியவற்றில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு (Bachelor of Science) முடித்திருக்க வேண்டும் (அல்லது) இப்படிப்புகள் இடம்பெற்ற ஒங்கிணைந்த பி.எஸ்சி பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இவையில்லாமல் இவற்றில் 3 ஆண்டுகள் டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இப்பதவிகு விண்ணப்பிக்கலாம்.


டெக்னீஷியன் கிரேடு III பதவிக்கு பிட்டர், வெல்டர், எலெக்ட்ரிக்கல், வயர்மேன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பிரிவுகளில் ஐடிஐ (ITI) முடித்திருக்க வேண்டும். 10-ம் வகுப்பிற்கு பின்னர் ஐடிஐ தகுதி பெற்றிருக்க வேண்டும்.


சம்பள விவரம்


ரயில்வே டெக்னீஷியன் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு கிரேடு I பதவிக்கு நிலை 5 கீழ் அடிப்படை சம்பளம் ரூ.29,200 ஆகும். இவையுடன் கொடுப்பனைகள், அகவிலைப்படி ஆகியவை வழங்கப்படும்.

கிரேடு III பதவிகளுக்கு நிலை 2 கீழ் அடிப்படை சம்பளம் ரூ.19,900 ஆகும். மேலும் கொடுப்பனை, அகவிலைப்படி வழங்கப்படும்.

தேர்வின் மூலம் தேர்வு

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் 3 கட்ட தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. முதலில் விண்ணப்பதார்கள் கணினி வழியில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதனைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும்.


ஜூன் 28 முதல் விண்ணப்பம் தொடக்கம்

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் வரும் ஜூன் 28 முதல் விண்ணப்பங்கள் தொடங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் rrbchennai.gov.in என்ற சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் இணையதளம் வழியாக விவரங்களை அறிந்துகொள்ளலாம். பணிக்கான முழுமையான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்படும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் தொடங்கி ஜூலை 28 வரை பெறப்படுகிறது.


ஐடிஐ, பொறியியல், பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வாய்ப்பு பயன்படுத்திக்கொண்டு ரயில்வே தேர்விற்கு விண்ணப்பம் திறந்தவுடன் விண்ணப்பிக்கலாம். முழுமையான அறிவிப்பு வெளியானதும், மண்டல வாரியாக காலிப்பணியிடங்களின் விவரங்கள் தெரியவரும்.

Comments

Popular posts from this blog